
Vignesh sivan LIC | எல்.ஐ.சி பட டைட்டிலுக்கே சிக்கல் எழுந்துள்ள நிலையில் தற்போது நயன்தாரா நடிக்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது
விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐசி என்ற படத்தை தொடங்கி இருக்கிறார்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பு நடந்த நிலையில் தற்போது எல்ஐசி என டைட்டில் வைப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது
டைட்டிலை மாற்றவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதனால் விரைவில் விக்னேஷ் சிவன் டைட்டிலை மாற்ற இருப்பதாக தெரிகிறது
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்
மேலும் ஹீரோவின் அக்கா ரோலில் லீட் கேரக்டராக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது
ஆனால் தற்போது அவர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் சம்பளம் ரூ. 10 - 12 கோடி என்பதால் தான் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது