
Ramar Temple | அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கான மரக்கதவுகளை தமிழ்நாட்டை சேர்ந்த மரச்சிற்பக் கலைஞர் ரமேஷ் அழகுற வடிவமைத்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். விழாவில் இந்து மத தலைவர்கள், துறவிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரப்பிரதேச அரசும் தயாராகி வருகிறது
கோயிலின் நுழைவு பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ராமர் - சீதை கருவறைகள், ராமரின் தம்பி லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு, 44 தேக்கு மரக்கதவுகள் தயாராகி உள்ளன.